Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

​இன்றைய ராசி பலன் 27.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

0 2

இன்றைய ராசிபலன் மே 27, 2024, குரோதி வருடம் வைகாசி 14, திங்கட் கிழமை, சந்திரன் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். ரிஷப ராசியில் உள்ள கிருத்திகை, ரோகிணி சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று அதிக உற்சாகத்துடன் எந்த ஒரு விஷயத்திலும் ஈடுபடுவதை தவிர்க்கவும். உங்களின் வருமானம் அதிகரித்து மனமகிழ்ச்சியை அடைவீர்கள். பணம் தொடர்பான விஷயத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்களுக்கு வரவேண்டிய நிலுவைத் தொகை வந்து சேரும். குடும்பத்தில் சகோதர, சகோதரிகளின் முழு ஆதரவை தெரிவிப்பீர்கள். உங்களின் கவலை குறைய கூடிய நாள்.

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று கலவையான பலன் தரக்கூடிய நாள். இன்று நாள் முழுவதும் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டம தினமாக அமைகிறது. இதனால் உங்களின் வேலை, வியாபாரம் போன்ற விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. பிறரை அனுசரித்துச் செல்லவும். வேலையில் வெற்றி, லாபத்தை பெற்றிட கடினமான முயற்சி தேவைப்படும். சமூகத்தில் நல்லிணக்கத்தை கடைப்பிடிக்கவும். குடும்ப உறுப்பினர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று உங்களின் பேச்சு, செயலில் எச்சரிக்கையுடன் செயல்படவும்.

மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். இன்று ஆன்மீகம் மற்றும் சமூக நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் பங்கேற்பார்கள். உங்களின் செயல்பாடு சமூகத்தில் நற்பெயரை பெற்றுத்தரும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தை நினைத்து கவலைப்படுவீர்கள். சமூகப் பணியில் ஈடுபடும் வாய்ப்புகள் உண்டு. நீண்ட நாளுக்காக தொந்தரவு கொடுத்த உடல் நலப் பிரச்சினைகள் தீர்ந்து மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று புத்திசாலித்தனம், புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.

கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று உணவு பழக்க வழக்கத்தில் கவனம் தேவை. இன்று வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் கவலை தரும். உங்கள் ஆரோக்கியம் தொடர்பாக பலவீனமாக உணர்வீர்கள். இன்று நீங்களே சிந்தித்து செயல்படுவது நல்லது. பிறரின் ஆலோசனை எடுப்பதற்கு முன் கவனம் தேவை. வியாபாரத்தில் யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். இன்று முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது.

சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் தலைமைத்துவ திறன் அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். குடும்ப பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கும் நபர்களுக்கு நல்ல வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான புதிய ஒப்பந்தம் கிடைத்து, அதில் பெரிய லாபத்தையும் பெறலாம்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று பணம் சம்பந்தமான விஷயங்களில் உங்களுக்கு சாதகமான பலனை தரக்கூடியதாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த நற்பலனை பெற, கூடுதல் கவனத்துடன், கடினமாக உழைக்க வேண்டிய நாள். இன்று யாரிடமும் கடன் வாங்குவதை தவிர்ப்பது அவசியம். குடும்பத்திலும், பணியிடத்திலும் யாரிடமும் வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது அவசியம்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட்டு முன்னேற்றம் பெறக்கூடிய நாள். மாணவர்கள் உயர்கல்வியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். வேலை தேடுபவர்களுக்கு அது தொடர்பான சில நல்ல செய்திகள் தேடி வரும். குடும்ப உறுப்பினர்களுடன் இருக்கக்கூடிய மனவருத்தம் நீங்கி மகிழ்வீர்கள். வேலை தொடர்பாக இருக்கக்கூடிய மன அழுத்தம் நீங்கும்.

விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று விசேஷமான நாளாக இருக்கும். புதிய சொத்து வாங்குவதில் முன்னேற்றமும், மன மகிழ்ச்சியும் அடைவீர்கள். குடும்பத்தில் இருக்கக்கூடிய குழப்பங்கள் நீங்கும். உங்களை மேம்படுத்திக் கொள்வதற்கான விஷயத்தில் முழு கவனம் செலுத்துவது நல்லது. புதிய வேலைகளை ஆர்வத்துடன் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். சில முக்கியமான வேலைகளை முடித்து மகிழ்வீர்கள். சக ஊழியர்களின் நல்ல ஆதரவு கிடைக்கும்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரம் செய்யக்கூடிய அவர்களுக்கு முன்னேற்றம் தரக்கூடிய நாள். வியாபாரத்தில் சில புதிய ஒப்பந்தங்கள் கிடைத்து மகிழ்வீர்கள். காதல் வாழ்க்கையில் கோபத்தை தவிர்ப்பது நல்லது. இன்று சமூகப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். இன்று சாம்பலை தவிர்த்து உத்வேகத்துடன் செயல்பட, தடைபட்ட வேலைகளை குறித்து நேரத்தில் முடிக்க முடியும். ஆபத்தான வேலைகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டிய நாள். நிதி சார்ந்த சிக்கலை சந்திக்க நேரிடும்.

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். உங்களின் பிள்ளைகளின் செயல்பாடு மதிப்பும் மரியாதையை அதிகரிக்கும். இன்று பிறருக்கு மரியாதை கொடுத்து நடப்பீர்கள். உங்களின் கௌரவம் அதிகரிக்கும். நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை சிறப்பாக நிறைவேற்ற முடியும். மாணவர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடனான பிரச்சனைகளை பேசி தீர்ப்பது நல்லது. எந்த ஒரு செயலிலும் குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு, ஆதரவு சிறப்பாக கிடைக்கும்.

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று பொறுப்புடன் செயல்பட வேண்டிய நாள். உங்களின் நீண்ட கால திட்டங்கள் நிறைவேற்றுவதில் முன்னேற்றம் ஏற்படும். இன்று ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபட்டு மகிழ்ச்சி அடைவீர்கள். வேலையில் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். இன்று உங்களின் பேச்சில் இனிமையை கடைப்பிடிப்பது மரியாதை பெற்று தரும். உங்கள் பிள்ளைகளின் செயல்பாடு மகிழ்ச்சியை தரும்.

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் பிஸியான நாளாக இருக்கும். உங்களின் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எதிரிகள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். எதிரிகள் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த முயல்வார்கள். இன்று வெளிநாடுகளில் இருந்து ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்யக்கூடியவர்களுக்கு சில பிரச்சினையை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் உங்களின் கடின உழைப்புக்கு மரியாதை கிடைக்கும். இன்று வியாபார விஷயத்தில் யார் என் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். இதனால் பிரச்சனை இதுதான் சந்திக்க நேரிடும்.

Leave A Reply

Your email address will not be published.