D
80ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகர்களில் ஒருவர் ராமராஜன். இவருக்கு கிராமப்புறங்களில் ரசிகர்கள் பட்டாளமே ஏராளமானோர் உள்ளதை நாம் அனைவரும் அறிவோம்.
ஹீரோவாக மட்டுமே தொடர்ந்து நடித்து வந்த ராமராஜன் ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து காணாமல் போனார். மேலும் தற்போது சாமானியன் திரைப்படத்தின் மூலம் மீண்டும் ஹீரோவாகவே ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.
சமீபத்தில் வெளிவந்த இப்படம் மக்களிடையே ஓரளவு நல்ல வரவேற்பை பெற்று வருகிறதாக கூறப்படுகிறது. நடிகர் ராமராஜன் நடிகை நளினியை 1987ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். 13 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு பின் இருவரும் பிரிந்துவிட்டனர். இந்த தம்பதிக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.
இந்த நிலையில், ஏன் நாங்கள் இருவரும் விவாகரத்து பெற்று கொண்டோம் என்பது குறித்து நடிகை நளினி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இதில் ஜாதகம் தான் எங்களுடைய விவாகரத்துக்கு காரணம் என தெரிவித்துள்ளார் நளினி.
“நான் எத்தனை ஜென்மங்கள் எடுத்து பிறந்தாலும் அவர் தான் எனக்கு கணவராக வேண்டும். நானும் அவரும் தற்போது கூட நன்றாக பேசிக்கொண்டு தான் இருக்கிறோம். எங்களுக்குள் நேரம் சரியில்லை நாம் இருவரும் பிரிந்து இருந்தால் நல்லது. பிள்ளைகள் பிறந்து தந்தையுடன் இருந்தால் நல்லது இல்லை என்ற ஜாதகம் ரீதியான காரணங்கள் தான் நாங்கள் இருவரும் விவாகரத்து பெற்றோம். அவருக்கு ஜாதகத்தின் மீது ரொம்ப நம்பிக்கை” என நளினி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.