D
செல்வபாரதி இயக்கத்தில் 2003ம் ஆண்டு விஜய் மற்றும் சினேகா ஜோடியாக நடித்து வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் வசீகரா.
இந்த படத்தில் இவர்களின் ஜோடி பெரிதும் பேசப்பட்டது. காதல், காமெடி, குடும்பம் என அனைத்தும் கலந்த கலவையாக படம் அமைந்தது. அதன்பின், இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவே இல்லை.
சமீபத்தில் விஜய் மனைவியாக சினேகா GOAT படத்தில் நடித்திருப்பார். இந்த ஜோடியை மீண்டும் திரையில் ஒன்றாக நடிப்பதை பார்த்து ரசிகர்கள் பெரிதும் கொண்டாடினர்.
அதுமட்டுமில்லாமல், இந்த படத்தில் சினேகா மற்றும் விஜய் இடம்பெறும் அழகான காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தது.
சினேகா விஜய்க்கு அண்ணியாக நடிக்கும் வாய்ப்பை மறுத்தது ஏன் என்பதை குறித்து சமீபத்தில் நடைபெற்ற விருது விழா நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.
இதுகுறித்து சினேகாவின் கணவர் பிரசன்னா கேள்வி கேட்டிருந்த நிலையில், சினேகா பதில் அளித்துள்ளார்.
அதில், விஜய்யுடன் ஜோடியாக நடித்து விட்டு திடீரென அவருக்கு அண்ணியாக நடிக்க வேண்டும் என்று சொன்ன போது எனக்கு அது சரியாக படவில்லை.
அதனால் தான் அந்த படத்தை நிராகரித்து விட்டேன் என்று கூறியுள்ளார். இதற்கு ரசிகர்கள் வாரிசு படத்தில் தான் சினேகா அண்ணி ரோலில் நடிக்க மறுத்துள்ளார் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.