Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

இலங்கையில் 14 இலட்சத்தை அண்மித்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

0 0

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரை நாட்டிற்கு வருகை வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 14 இலட்சத்தை நெருங்குவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஜனவரி முதலாம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,395,773 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், கடந்த பெப்ரவரியில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதுடன், அதன் எண்ணிக்கை 218,350 ஆகும்.

மேலும், ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் 200,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

இதில் இந்தியா, பிரித்தானியா, ரஷ்யா, ஜெர்மனி, சீனா ஆகிய நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குழு வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த வருடம் இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,487,303 என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.