D
இன்றையதினம் வாக்களிப்பில் ஈடுபட்ட ஒருவர் அதனை புகைப்படம் எடுத்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காலி(galle) மாவட்ட, மித்தியகொட காவல்துறை பிரிவிற்குட்பட்ட தெல்வத்த சுமணராம விகாரையின் வாக்களிப்பு நிலையத்தில்இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஹிக்கடுவ தெல்வத்த போயகொட வீதியைச் சேர்ந்த 44 வயதுடைய ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவரே கைது செய்யப்பட்டவராவார்.
வாக்களிப்பு நிலையத்திற்கு இன்று காலை வந்த அவர், தனது வாக்குச்சீட்டை பெற்றுக்கொண்டு வாக்களித்த பின்னர், அதனை புகைப்படம் எடுக்கும் போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை வாக்களிப்பு நிலையத்திற்குள் கைபேசியை கொண்டு செல்வதற்கும் வாக்குச் சீட்டினை புகைப்படம் எடுப்பதற்கும் தேர்தல் ஆணைக்குழு தடைவிதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.