Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

தேர்தலை முன்னிட்டு நாட்டில் தீவிரப்படுத்தப்பட்டுள்ள விசேட பாதுகாப்பு திட்டங்கள்

0 1

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ (Nihal Taltuwa)தெரிவித்துள்ளார்.

சுமூகமான மற்றும் பாதுகாப்பான வாக்குப்பதிவை உறுதி செய்வதற்காக சுமார் 63,000 காவல்துறை உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறையினருக்கு மேலதிகமாக முக்கிய பாதுகாப்பு இடங்களில் முப்படையினரைச் சேர்ந்த பணியாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளதை பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

ஒழுங்கு மற்றும் பாதுகாப்பைப் பேணுவதற்குத் தேவையான மேலதிகப் பணியாளர்களை ஈடுபடுத்துவதற்கு ஆயுதப் படைகள் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திரமான தேர்தலை நடத்துவதற்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பாதுகாப்பு நடவடிக்கைகளும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளது.

இதேவேளை, தேவை ஏற்பட்டால் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் வன்முறை வெடித்தால் அது கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ்(Tiran Alles) இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.