D
விஜய் டிவியின் பிக் பாஸ் 8வது சீசனில் போட்டியாளராக வந்திருக்கிறார் நடிகை சாச்சனா. மகாராஜா படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்ற அவர் பிக் பாஸ் 8க்கு வந்திருக்கிறார்.
ஷோ தொடங்கிய முதல் நாளே அவர் எலிமினேட் செய்யப்பட்டார். 24 மணி நேரத்தில் எலிமினேட் ஆன அவர் அதன் பிறகு சில நாட்கள் கழித்து மீண்டும் பிக் பாஸுக்கு வந்திருக்கிறார்.
சாச்சனா நடிகை என்பதை தாண்டி நிஜத்தில் ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறாராம். அவர் அதில் இருந்து லீவு எடுத்து கொண்டு தான் படங்களில் நடிக்க செல்கிறாராம்.