Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

தேர்தலில் வெற்றி :அநுரகுமாரவிற்கு நாமல் வாழ்த்து!

0 0

முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச(namal rajapaksa) நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்தி (NPP)க்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தனது எக்ஸ் பதிவில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“இந்த குறிப்பிடத்தக்க பயணத்தில் அநுர குமார மற்றும் தேசிய மக்கள் சக்திக்கு வாழ்த்துக்கள்! மக்களின் ஆணையை ஏற்று அவர்கள் விரும்பிய மாற்றத்தை நோக்கி உழைக்கும் நீங்கள் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

Congratulations to @anuradisanayake & the #NPP on this significant journey! Wishing you success as you accept the people’s mandate and work toward the change they have sought. This marks a new path and a fresh approach chosen by the people. While embracing healthy competition,…

— Namal Rajapaksa (@RajapaksaNamal) November 15, 2024

இது ஒரு புதிய பாதையையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அணுகுமுறையையும் குறிக்கிறது. ஆரோக்கியமான போட்டியைத் தழுவும் அதே வேளையில், எமக்கு வாக்களித்தவர்கள் மற்றும் எங்கள் பார்வையில் நம்பிக்கை கொண்டவர்கள் – எங்கள் ஆதரவாளர்களின் மதிப்புகளுக்கு பெரமுன உறுதியாக உள்ளது.

நாங்கள் தொடர்ந்து உங்களுடன் நின்று இந்த விழுமியங்களை நிலைநிறுத்துவோம். சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கு தேசியப் பட்டியல் இடம் கிடைக்குமா என்பது தேர்தல் ஆணையத்தால் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், நாமல் மீண்டும் நாடாளுமன்றத்துக்கு வருவாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

நாமல் தேர்தலில் போட்டியிடாமல், கட்சியின் தேசிய பட்டியலில் தனது பெயரை முன் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.