D
ஈபிடிபியின்(epdp) செயலாளர் நாயகமும் முன்னாள் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா(douglas devananda) நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தனது 30 வருட அரசியல் வாழ்க்கையில் படுதோல்வியடைந்துள்ளார்.
கடந்த 30 வருடங்களில் நடைடபெற்ற தேர்தல்களில் வெற்றிபெற்று ஆட்சி புரிந்த அரசாங்கங்களுடன் இணைந்து பல்வேறு அமைச்சுப்பதவிகளை வகித்து வந்தார்.
கடந்த ரணில் தலைமையிலான அரசாங்கத்திலும் கடற்றொழில் அமைச்சராக பதவி வகித்தார். அத்துடன் வன்னி தேர்தல் தொகுதியிலும் திலீபன் என்பவர் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
இம்முறை கொழும்பில் இரண்டு பிக்குகள் மற்றும் இந்து மதகுரு உட்பட பலரை தேர்தலில் களமிறக்கியிருந்தார்.
இவ்வாறு பல்வேறு முயற்சிகளை அவர் எடுத்த போதிலும் படுதோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.