D
போர்க்குற்றத்துக்காக, இலங்கையை தண்டிக்க வேண்டும் என்று இந்திய மத்திய அரசிடம் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இனப்படுகொலை தொடர்பில் சர்வதேச நீதிமன்றங்களில் விசாரணைகள் வேண்டும் என்று கோரப்படுகிறது
இதேபோன்று இலங்கை விடயத்திலும் மத்திய அரசு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
மனித உரிமைகளை போதிக்கும் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் இலங்கையின் இனப்படுகொலை குறித்து மௌனமாக உள்ளன.
இலங்கையில் 15 ஆண்டுகளின் முன்னர் 1.5 லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
எனினும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள்,கடந்த 15 ஆண்டுகளாக குற்றவாளிகள் சுதந்திரமாக நடந்து வருகின்றனர் என்றும் அன்புமணி ராமதாஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் துன்புறுத்தல்கள் இன்னும் தொடர்வதாக ஐக்கிய நாடுகள் ஆணைக்குழுவும் தெரிவித்துள்ளது.
தமிழர்களுக்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்களாகும். எனவே இந்த குற்றங்களுக்கு எதிராக இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை இந்த செயற்பாட்டில் தோல்வியுற்றால் இராஜதந்திர உறவுகளை முறித்துக் கொள்வதாக இலங்கையை இந்தியா எச்சரிக்க வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.