D
இந்தியாவின் பெரும் பணக்காரரான அம்பானி வீட்டு திருமண கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக எம்.எஸ்.தோனி தனது குடும்பத்துடன் புறப்பட்டார்.
Reliance Industries Ltd தலைவரும், நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு 2023 -ம் ஆண்டு ஜனவரியில் மும்பையில் உள்ள அன்டாலியா இல்லத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களின் திருமணம் வருகின்ற ஜூலை 12 -ம் திகதி நடைபெற உள்ளது.
இந்நிலையில், முதலாவது திருமண கொண்டாட்ட நிகழ்ச்சி ஜாம்நகரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக Mark Zuckerberg, Bill Gates, Shah Rukh Khan, Salman Khan, Janhvi Kapoor, Manushi Chillar, Rani Mukerji, Manish Malhotra, Ranveer Singh, Deepika Padukone, Alia Bhatt, Ranbir Kapoor, Atlee உள்ளிட்டோர் வந்தனர்.
இதனைத்தொடர்ந்து, மே 28 -ம் திகதியில் தொடங்கும் திருமண கொண்டாட்டத்தின் இரண்டாம் கட்ட நிகழ்ச்சிக்காக, 800 விருந்தினர்களுடன் இத்தாலியில் இருந்து புறப்பட்டும் கப்பல் ஒன்று பிரான்ஸ் சென்றடைகிறது.
இந்த நிகழ்ச்சிக்காக 300 வி.ஐ.பி-க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஷாருக்கான், அமீர்கான், சல்மான் கான், அக்ஷய் குமார், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், ரன்வீர் சிங், தீபிகா படுகோன், கத்ரீனா கைஃப், விக்கி கவுஷல், ரன்பீர் கபூர், ஆலியா பட், எம்.எஸ்.தோனி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக எம்.எஸ்.தோனி, தனது மனைவி மற்றும் மகளுடன் புறப்பட்டுச் சென்றார். இதுதொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.