D
இன்றைய ராசிபலன் மே 28, 2024, குரோதி வருடம் வைகாசி 15, செவ்வாய்க் கிழமை, சந்திரன் மகரம் ராசியில் சஞ்சரிக்கிறார். ரிஷபம் ராசியில் உள்ள ரோகிணி சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று எந்த ஒரு வேலையும் அவசரமாக செய்வதை தவிர்க்க வேண்டிய நாள். இன்று உங்கள் உறவுகள் இருக்கக்கூடிய கருத்து வேறுபாடுகளை பேசி தீர்ப்பீர்கள். இன்று உங்கள் வார்த்தையில் இனிமை கடைப்பிடிப்பது அவசியம். இன்று பிறரின் ஆலோசனையை ஏற்பதற்கு முன் சிந்தித்து செயல்படவும். நிதி விஷயங்களில் புத்திசாலித்தனமாக செயல்படவும். இன்று சில ஆடம்பரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரம் செய்யக்கூடியவர்களுக்கு நல்ல நாளாக அமையும். புதிய சாதனை, பாராட்டுகளை பெற்று மன அமைதி அடைவீர்கள். இன்று உங்களின் வரவு மற்றும் செலவு இடையே சமநிலையை பராமரிப்பது அவசியம். இன்று புதிய நபர்களை சந்திப்பதும், அவர்கள் மூலம் நல்ல ஆதரவையும், புதிய வாய்ப்புகளையும் பெறுவீர்கள். அரசு வேலையில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று செல்வாக்கு, புகழ் அதிகரிக்கும். இன்று மூதாதையர் சொத்துக்கள் கிடைத்து மகிழ்விர்கள். புதிய வருமான ஆதாரங்களை பெறுவீர்கள். பிள்ளைகள் மூலம் சில உற்சாகமான செய்திகளை கேட்க முடியும். இன்று உங்கள் வேலையில் உயரதிகாரிகளுடன் இணக்கமாகச் செயல்படுவது நல்லது. முக்கிய வேலைகளை முடிப்பதில் அவர்களின் நல்ல ஆலோசனை பெற்று செயல்படுவது வெற்றியை தரும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று பயணம் செல்லக்கூடிய நாள். ஆன்மீகப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். உங்களின் கௌரவம் அதிகரிக்கும். உங்களின் செயல்பாடு சிறப்பாக இருக்கும். இன்று உங்களுக்கு வேலையை முடிப்பதில் அதிர்ஷ்டம் துணையாக இருக்கும். வருமானம் உயர்வதற்கான சில புதிய வாய்ப்புகள் பெறுவீர்கள். வியாபாரத்தில் உள்ள பிரச்சனைகளை பேசி தீர்ப்பீர்கள். நண்பர்களுடன் மகிழ்ச்சியான சூழல் இருக்கும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று கலவையான பலன்கள் கிடைக்கும். இன்று குடும்பத்தில் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்த்து, அனுசரித்து செல்வது அவசியம். பண விஷயத்தில் கவனமாக இருக்கவும். இல்லையெனில் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும். ஆன்மீக பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். இன்று நீங்கள் செய்யக்கூடிய எந்த ஒரு பணியும் சிறப்பான பலனை தரும். இன்று அன்புக்குரியவர்களின் உதவியால் வேலைகள் வேகமாக முடியும். தொழில் சார்ந்த விஷயத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று சிலருடன் சேர்ந்து செய்யக்கூடிய எந்த ஒரு வேலையும் நல்ல பலனை தரக்கூடியதாக இருக்கும். உங்கள் மீதான நம்பிக்கை மற்றும் மரியாதை அதிகரிக்கும். பணியிடத்தில் உங்களின் பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றி வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். குடும்ப பொறுப்புகளை நிறைவேற்றுவதில் மும்முரமாக செயல்படுவீர்கள். இன்று உங்களின் பழைய தவறுகள் மூலம் அனுபவத்தைப் பயன்படுத்தி வெற்றி பெறுவீர்கள்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று பண பரிவர்த்தனைகளில் கவனம் தேவை. இன்று யாரிடமும் கடன் வாங்குவதையோ, கடன் கொடுப்பதையோ தவிர்ப்பது அவசியம். இல்லையெனில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உங்களின் கடின உழைப்பால் பணியிடத்தில் வேலையை சிறப்பாக செய்து நற்பெயரைத் தருவீர்கள். இன்று உங்களின் முடிவு எடுக்கும் திறன் சிறப்பாக இருக்கும். வேலைகளை முடிப்பதில் கவனம் செலுத்துவது அவசியம்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று முன்னேற்றம் தரக்கூடிய நாளாக இருக்கும். இன்று குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் வார்த்தைகளை மதித்து நடப்பது நல்லது. பயணங்கள் மூலம் அனுகூல பலன்களை பெறுவீர்கள். இன்று நண்பர்களிடம் இருந்து சில நல்ல செய்திகளை கேட்பீர்கள். அவர்களிடம் மறக்க முடியாத தருணங்களைச் செலவிட வாய்ப்புள்ளது. வியாபாரம் தொடர்பான விஷயத்தில் நல்ல முன்னேற்றமும், மகிழ்ச்சியான நிகழ்வுகளும் நடக்கும். பணியிடத்தில் உங்களுக்கான அங்கீகாரத்தை பெறுவீர்கள்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று எந்த ஒரு விஷயத்திலும் அதிக உற்சாகத்தை தவிர்ப்பது நல்லது. இன்று வீடு, மனை வாங்கும் விஷயத்தில் முன்னேற்றம் ஏற்படும். உங்களுக்கு விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஒருங்கிணைப்பு, ஆதரவு சிறப்பாக கிடைக்கும். வியாபாரத்தில் சில பிரச்சனைகளை எதிர்கால நேரிடும். நிலை தொடர்பாக பெரிய அளவில் நிவாரணம் பெறுவீர்கள். மாணவர்கள் படிப்பில் சிறப்பான வெற்றியை பெறுவார்கள்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று சோம்பலை கைவிட்டு செயல்பட்டால் முன்னேற்றம் சிறப்பாக கிடைக்கும். இன்று மற்ற வேலைகளில் கவனம் செலுத்தாமல் வேலையை முடிப்பதில் கண்ணும் கருத்துமாக செயல்படுவது அவசியம். இன்று உங்களின் பலம் அதிகரிக்கும். உங்களின் முக்கிய பொறுப்புகளை செய்து முடிப்பீர்கள். பயணங்கள் மூலம் அனுகூலமான பலன்களை பெற்றிடுவீர்கள். சமூகப்பணிகளில் ஈடுபடும் ஆர்வம் உண்டாகும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். இன்று உங்களின் பேச்சு, செயல் சிறப்பாக இருக்கும். வீட்டில் விருந்தினர்களின் வருகை உற்சாகத்தை ஏற்படுத்தும். உங்கள் பணிகளை முடிப்பதில் திட்டமிட்டு செயல்படுவது அவசியம். கடினமான சூழ்நிலைகளில் பெரியவர்களின் நல்ல ஆலோசனை உதவும். குடும்ப உறுப்பினர்களின் பரஸ்பர ஒத்துழைப்பு கிடைக்கும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபட்டு நற்பெயரை பெறுவீர்கள். இன்று உங்களின் ஆளுமை சிறப்பாக இருக்கும். உங்களின் ஞாபகத் திறன் உங்களின் முக்கிய விஷயத்தில் உதவும். உங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். உங்களின் பழக்க வழக்கத்தில் புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். ஆன்மீக விஷயத்தில் நம்பிக்கை அதிகரிக்கும். இன்று உங்களின் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.