Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

இளவரசி கேட் இல்லாத நேரத்தில் ராஜ குடும்பத்துடன் நெருக்கம் காட்டும் வில்லியமுடைய ’ரகசிய காதலி’

0 3

இளவரசர் வில்லியமுடைய ரகசிய காதலி என ஊடகங்களால் விமர்சிக்கப்பட்ட பெண், மீண்டும் ராஜ குடும்பத்துடன் மீண்டும் நெருக்கம் காட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

இளவரசர் வில்லியமுடைய ரகசிய காதலி என்று ஊடகங்களால் விமர்சிக்கப்பட்டவர் Rose Hanbury. இளவரசி கேட், குட்டி இளவரசர் லூயிஸை தன் வயிற்றில் சுமந்துகொண்டிருந்த நேரத்தில் , வில்லியமுக்கும் ரோஸுக்கும் தவறான உறவு இருந்ததாக ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

2019ஆம் ஆண்டு, இந்த விடயம் தொடர்பில் வில்லியமுக்கும் கேட்டுக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாகவும், கேட்டின் தோழியாக இருந்த ரோஸுக்கும் வில்லியம் கேட் தம்பதிக்கும் இடையில் அதனால் கருத்துவேறுபாடுகள் உருவானதாகவும் செய்திகள் பரவின.

இந்நிலையில், இளவரசி கேட் புற்றுநோய் தாக்கி வெளியில் தலைகாட்டாமல் இருந்த நேரத்தில், தானும் வில்லியமும் காரில் பயணிக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அவர் வெளியிட்ட புகைப்படத்தில் அவரது திருமண மோதிரம் இல்லாததாலும், புகைப்படத்தில் கேட்டின் முகம் தெளிவாகத் தெரியாததால் அது ரோஸ் என்று சமூக ஊடகங்களில் கருத்துக்கள் பரவத்துவங்கின.

இந்நிலையில், இளவரசர் வில்லியமுடைய ரகசிய காதலி என ஊடகங்களால் விமர்சிக்கப்பட்ட ரோஸ், ராஜ குடும்பத்துடன் மீண்டும் நெருக்கம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் அவர் ராணி கமீலாவுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டதைக் காட்டும் காட்சிகளும், அவரது மகன் மன்னர் சார்லசுடைய அங்கியின் தொங்கலைப் பிடித்துக்கொண்டு நடக்கும் காட்சிகளும் வெளியாகின.

இளவரசி கேட்டை எங்கும் பார்க்க முடியவில்லை. இப்படிப்பட்ட சுழலில், இளவரசி கேட் அணியும் தொப்பிய அணிந்தவண்ணம் வலம் வருகிறார் ரோஸ். அவர் ராணி கமீலாவுடன் நெருக்கம் காட்டுகிறார். அவரது மகன், மன்னர் சார்லசுடைய அங்கியின் தொங்கலைப் பிடித்துக்கொண்டு அவர் பின்னாலேயே நடக்கிறார் என சமூக ஊடகமான எக்ஸில் செய்தியும் வீடியோக்களும் வெளியிட்டுள்ளார் ஒருவர். ஆக, மீண்டும் ரோஸ் தலைப்புச் செய்தியாகியுள்ளார்!

Leave A Reply

Your email address will not be published.