D
நைஜீரியாவில் உள்ள கிராமம் ஒன்றில் ஆயுதமேந்திய குழு ஒன்று புகுந்து 10 கிராம மக்களை கொன்று 160க்கும் மேற்பட்டவர்களை கடத்தி சென்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நைஜீரியாவில் இயங்கி வரும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான போகோ ஹராம் அமைப்பின் குழுவினால் இந்த கடத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மத்திய நைஜீரியாவில் உள்ள குச்சி என்ற கிராமத்தில் இந்த கடத்தல் நடந்துள்ளதாகவும், கடத்தப்பட்டவர்களில் ஏராளமான குழந்தைகள் மற்றும் பெண்களும் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆயுதம் ஏந்திய முந்நூறுக்கும் மேற்பட்டோர் மோட்டார் சைக்கிள்களில் வந்து இந்த கடத்தலை நடத்தியதாக நைஜீரிய அரசு தெரிவித்துள்ளது.