D
இமயமலைக்கு புறப்படும் நடிகர் ரஜினிகாந்திடம் கேட்கப்பட்ட மோடி மற்றும் இசை குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்காமல் சென்றது பேசுபொருளாகியுள்ளது.
‘வேட்டையன்’ படப்பிடிப்பை முடித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், கடந்த ஒரு வாரம் அபுதாபியில் ஓய்வெடுக்க சென்று சென்னை திரும்பினார்.
இதனையடுத்து, இன்று அதிகாலை ஒரு வாரகால ஆன்மிக பயணம் செல்ல இமயமலை கிளம்பியுள்ளார். இவர், ஒவ்வொரு வருடமும் இமயமலை பாபாஜி குகை, கேதர்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
கொரோனா காலங்களில் ரஜினிகாந்த் பயனம் மேற்கொள்ள முடியாத நிலையில், கடந்த ஆண்டு மீண்டும் இமயமலை பயணத்தைத் தொடங்கினார்.
இன்று அதிகாலை ஆன்மீக பயணமாக இமயமலை கிளம்பிய ரஜினிகாந்த், ஜூன் மாதம் முதல் வாரத்தில் சென்னை திரும்புகிறார்.
இந்நிலையில், இமயமலை புறப்படும் நேரத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்திடம், மீண்டும் மோடி ஆட்சியை கைப்பற்றுவாரா என்று கேள்வி கேட்டனர். அதற்கு அவர் அரசியல் கேள்விகள் வேண்டாம் என்று கூறினார்.
பின்னர், இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை சர்ச்சையை குறிப்பிட்டு “பாடல் பெரிதா? இசை பெரிதா?” என்று கேள்வி கேட்டனர். அதற்கு அவர் சிரித்துக்கொண்டே “அண்ணா, நோ கமெண்ட்ஸ்!” என்று கூறினார்.