D
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பல படங்கள் நடித்து வந்தவர் தமிழில் அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் நாயகி அவதாரம் எடுத்தவர் நடிகை மஞ்சிமா மோகன்.
பின் சத்ரியன், இப்படை வெல்லும், தேவராட்டம், FIR என தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார், தெலுங்கிலும் சில படங்கள் நடித்துள்ளார்.
கடைசியாக 2023ம் ஆண்டு Boo என்ற படத்தில் நடித்திருக்கிறார், அதன்பிறகு எந்த படங்களும் நடிக்கவில்லை.
இவர் தமிழ் சினிமாவின் இளம் நாயகன் கௌதம் கார்த்திக்கை காதலித்து வர இருவரும் கடந்த 2022ம் ஆண்டு சிம்பிளான முறையில் திருமணம் செய்துகொண்டார்கள்.
அண்மையில் ஒரு பேட்டியில், திருமணத்திற்கு முன்பே நான் கர்ப்பமாக இருந்ததாகவும், எனது மாமனாருக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என பொய்யான தகவல்கள் பரவின.
இந்த வதந்திகள் எங்களுடைய குடும்பத்தை காயப்படுத்தியது என்பது மட்டும் உண்மை, பெரும்பாலானோர் எங்கள் திருமணம் குறித்து மகிழ்ச்சியடைந்தனர், சிலர் ஏளனம் செய்தனர்.
திருமணத்துக்கு முன்பே சில கருத்துக்களை எதிர்கொண்டேன், ஆனால் அது என்னை ஒருபோதும் பாதிக்கவில்லை. ஆனால் திருமணத்துக்குப் பின் இதுகுறித்து கவலைப்பட்டிருக்கிறேன், இதுபோன்ற கமெண்டுகளை படித்து ஏன் வருத்தப்படுகிறார் என கவுதம் கேட்பார்.
நான் அவருக்கு சரியான ஜோடி இல்லை என்ற விமர்சனங்கள் பார்க்கும் போது வலிக்கும், அப்போது நான் தோல்வியடைந்தவளாக உணர்வேன். ஆனால் கவுதம் எனக்கு எப்போதும் துணையாக இருந்திருக்கிறார் என பேசியுள்ளார்.