D
நடிகை அமலா பால் கடந்த வருடம் நவம்பர் 5ம் தேதி காதலர் ஜகத் தேசாய் என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார்.
அதன் பின் 2024 ஜனவரியில் தான் கர்ப்பமாக இருப்பதாக போட்டோவுடன் அறிவிப்பை வெளியிட்டார் அமலா பால்.
தற்போது நிறைமாத கர்ப்பமாக இருக்கும் அமலா பால் தொடர்ந்து போட்டோஷூட் எடுத்து ஸ்டில்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் அமலா பாலுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்து இருக்கிறது என ஒரு செய்தி உலா வர தொடங்கி இருக்கிறது.
ஆனால் விசாரித்ததில் அமலா பாலுக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை என தகவல் வந்திருக்கிறது.