D
ஆர்.ஜே. பாலாஜி மற்றும் என்.ஜே. சரவணன் இணைந்து இயக்கிய திரைப்படம் மூக்குத்தி அம்மன். இப்படத்தில் நடிகை நயன்தாரா அம்மன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
மேலும் ஊர்வஷி, ஸ்ம்ருதி வெங்கட், அஜய் ஜோஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். நேரடியாக ஓடிடி-யில் வெளிவந்த இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.
மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில், மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்திற்கான வேலைகள் தற்போது துவங்கியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், அம்மன் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கவில்லையாம். அவருக்கு பதிலாக முன்னணி நடிகை திரிஷா தான் அம்மன் கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார் என லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.