D
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி 2 சீரியல் மூலம் பிரபலமானவர் சின்னத்திரை நடிகை விஜே அர்ச்சனா. இவர் நடந்து முடிந்த பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.
பிக் பாஸ் போட்டியில் Wild Card என்ட்ரியில் வந்த அர்ச்சனாவுக்கு ரசிகர்களுக்கு மக்கள் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன்மூலம் இறுதி வரை சென்று டைட்டில் வென்றார். இதை ரசிகர்களும் கொண்டாடினார்கள்.
நடிகை அர்ச்சனா பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் அருண் என்பவருடன் காதலில் இருப்பதாக கூறப்பட்டது. இருவரும் இணைந்து இருக்கும் சில புகைப்படங்களும் இணையத்தில் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், நடிகை அர்ச்சனா தனது காதல் உறவு குறித்து பேசியுள்ளார். இதில், நானும் அருணும் காதலிக்கவில்லை. இருவரும் நண்பர்கள் தான். மற்ற அனைத்துமே மக்களின் கற்பனை என கூறி, இந்த காதல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.