D
விஜய் ஜோடியாக தமிழன் என்ற படத்தில் நடித்து சினிமா துறையில் நுழைந்தவர் பிரியங்கா சோப்ரா. அதன் பின் ஹிந்தி சினிமாவில் நடிக்க தொடங்கி முன்னணி ஹீரோயினாக மாறி, அதன் பின் ஹாலிவுட்டிலும் நுழைந்தார்.
அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டு தற்போது அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிவிட்டார் பிரியங்கா.
இந்நிலையில் பிரியங்கா சோப்ரா சமீபத்தில் ரோம் நகரில் நடந்த ஒரு விழாவில் கலந்துகொண்டார். அதில் அவர் அணிந்து வந்த நெக்லஸ் தான் எல்லோரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.
நெக்லஸில் இருக்கும் 7 பெரிய வைரங்கள் 140 கேரட், மற்றும் அலை வடிவில் இருக்கும் இடத்தில் பொருத்தப்பட்ட 698 வைரங்கள் மொத்தம் 61.81 கேரட் ஆகும்.
இந்த நெக்லஸின் மொத்த மதிப்பு இந்திய ரூபாயில் 358 கோடி ரூபாய்க்கும் மேல் ஆகும். விலையை கேட்டு எல்லோரும் ஷாக் ஆகி இருக்கின்றனர்.