D
கடந்த பல வருடங்ளாக தயாரிப்பில் இருக்கும் இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி ஒருவழியாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. வரும் ஜூலை 12ம் தேதி படம் திரைக்கு வருகிறது.
தற்போது ப்ரோமோஷன் பணிகளை லைகா நிறுவனம் விறுவிறுப்பாக தொடங்கி இருக்கிறது. வரும் ஜூன் 1ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக இசை வெளியீட்டு விழாவை நடத்த இருக்கின்றனர்.
ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு நடிகர் ரஜினி, ராம் சரண் உட்பட பல முக்கிய பிரபலங்கள் வர இருப்பதாக முன்பு செய்தி பரவியது.
ஆனால் தற்போது சிஎஸ்கே கிரிக்கெட் வீரர் தோனிக்கு அழைக்க முயற்சி நடக்கிறதாம். அவர் வந்தால், தோனி தான் மெயின் கெஸ்ட் ஆக இருங்க வாய்ப்பிருக்கிறது எனவும் சினிமா துறையில் பேச்சு இருந்து கொண்டிருக்கிறது.