D
துரை செந்தில் குமார் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடித்து கடந்த 31ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் கருடன். சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் இருவரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
விடுதலை முதல் பாகத்தை தொடர்ந்து சூரி கதாநாயகனாக நடித்து வெளிவந்துள்ள கருடன் திரைப்படத்தின் மீது ரசிகர்கள் அதீத எதிர்பார்ப்பை வைத்திருந்தனர். அந்த எதிர்பார்ப்பை சூரி முழுமையாக பூர்த்தி செய்துள்ளார்
முதல் நாளில் இருந்து இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில், உலகளவில் இப்படம் மூன்று நாட்களில் ரூ. 15.5 கோடி வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
முதல் நாள் உலகளவில் ரூ. 4 கோடி வரை வசூல் செய்திருந்த கருடன் திரைப்படம், இரண்டு நாட்கள் முடிவில் ரூ. 15.5 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்துள்ளது.