D
இதுதான் உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் இந்தியன் 2. இப்படத்தை ஷங்கர் இயக்க லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படம் ஜூலை மாதம் பிரமாண்டமாக வெளியாகிறது.
இப்படத்திற்கான இசை வெளியிட்டு விழா நேற்று மாலை பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. சிம்பு, லோகேஷ் கனகராஜ், நெல்சன் உள்ளிட்ட பல திரையுலக நட்சத்திரங்கள் சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்தனர்.
இசை வெளியிட்டு விழா மேடையில் தனது உரையை முடித்தபின், கமலிடம் சில கேள்விகளை தொகுப்பாளராக இருந்த நடிகர் சிவா கேட்டார். அதில் ‘இந்த நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு இந்தியன் தாத்தா என்ன சொல்ல விரும்புகிறார்’ என கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு “சொல்லிட்டாரு, இப்போ தான் சொன்னது தான். என் மகள் ஸ்ருதி ஹாசன் மனசு வைத்திருந்தால் நான் இப்பவே தாத்தா தான்” என மகன் திருமணம் குறித்து பேசியிருந்தார். இதற்கு மேடைக்கு கீழ அமர்ந்திருந்த ஸ்ருதி ஹாசன் வேண்டவே வேண்டாம் என்பது போல் தலை அசைத்து கொண்டிருந்தார்.