D
2016ஆம் ஆண்டு ரியோவில் (Rio) நடைபெற்ற ஒலிம்பிக் (Olympic) விளையாட்டுப் போட்டிகளின் போது, இலங்கையின் தேசிய ஒலிம்பிக்குழு, நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை ஆராயுமாறு இலங்கையின் குற்றப் புலனாய்வுத் துறைக்கு சட்டமா அதிபர் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.
முகமது ஹசாம் உசுப், என்பவர் விளையாட்டு அமைச்சகத்தின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவில் தகவல் அறியும் உரிமைக் கோரிக்கையை தாக்கல் செய்ததைத் தொடர்ந்து இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
ரியோ ஒலிம்பிக்கின் போது பயண மற்றும் தங்குமிடச் செலவுகளுக்காக தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவருக்கும், பொதுச் செயலாளருக்கும் தலா 10,000 அமெரிக்க டொலர்களை ஏற்கனவே சர்வதேச ஒலிம்பிக் குழு வழங்கியிருந்து
எனினும் 10ஆயிரம் அமெரிக்க டொலர்களுக்கு சமமான இலங்கை ரூபாயை அவர்கள் வசூலித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த தொகை பின்னர் 2017ஆம் ஆண்டு திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் நேரத்தில் ஹேமசிறி பெர்னாண்டோ (Hemasiri Fernando) தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவராக செயற்பட்டுள்ளார்.
2009ஆம் ஆண்டு முதல் அந்தப் பதவியை வகித்து வரும் தற்போதைய பொதுச் செயலாளர் மெக்ஸ்வெல் டி சில்வாவும் இந்த நிதி விடயத்தில் தொடர்புபட்டுள்ளார்.
இந்தநிலையில் இதுவரை அவர்கள் இருவரும் தாம் குற்றமற்றவர்கள் என்ற நிலைப்பாட்டில் இருந்து வந்துள்ளனர்.
எனினும் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இருவருக்கு எதிராக மேலதிக நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சுமந்திரனின் ஆலோசனையில் தேர்தலை ஒத்திவைத்த ரணில்: கோவிந்தன் கருணாகரன் காட்டம்
சுமந்திரனின் ஆலோசனையில்