D
சினிமாவில் 80களில் இளைஞர்களை கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா.
இவர் இல்லை என்றாலும் எப்போதும் இவர் மக்களிடம் ஸ்பெஷல் தான். வசீகரிக்கும் கண்கள், அழகான சிரிப்பு என ரசிகர்களை கவர்ந்தவர்.
இவரது பிறந்தநாள், நினைவு நாள் வரும் போதெல்லாம் பிரபலங்கள் அவரைப் பற்றி மக்களுக்கு தெரியாத நிறைய நல்ல விஷயங்களை பகிர்ந்த வண்ணம் இருப்பார்கள்.
அப்படி தற்போது ஒரு பிரபல நடிகர் சில்க் ஸ்மிதா குறித்து பேசியுள்ளார்.
இவருக்கு ஒரு அறிமுகம் கொடுக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை.
மைக் மோகனாக வலம் வரும் இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். தற்போது ஹரா என்ற படத்தில் நடித்துள்ளார், படத்தின் புரொமோஷனுக்காக நிறைய ரியாலிட்டி ஷோ, பேட்டிகள் கொடுத்து வருகிறார்.
அப்படி ஒரு பேட்டியில் மோகன், சில்க் ஸ்மிதா குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர், படங்களில் வேண்டுமென்றால் சில்க் ஸ்மிதா கிளாமராக நடிக்கலாம், நிஜத்தில் மிகவும் நல்லவர். எனக்கு அவரை நன்றாகவே தெரியும், நான் அவருடைய நடிப்பு மற்றும் அவருடைய கேரக்டரை பார்த்து வியந்து போய் இருக்கிறேன்.
சில்க் ஸ்மிதா படப்பிடிப்பு என்றாலே ரசிகர்களை தாண்டி தயாரிப்பாளர்கள், பைனான்ஸியர்கள் என பலர் வந்து காத்துக் கொண்டிருப்பார்கள்.
ஆனால் எந்த இடத்திலும் சில்க் ஸ்மிதா அலட்டிக்கவே மாட்டார், ரொம்ப ரொம்ப சாதாரணமா பழகுவாங்க, அவங்க இல்லை என்பது இப்பவும் ஏற்றுக்கொள்ள கஷ்டமா தான் இருக்கு என பேசியுள்ளார்.