D
சின்னத்திரையின் கியூட்டான நட்சத்திர ஜோடி ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ்.
காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழிக்கு ஏற்ப இவர்கள் மார்க்கெட் இருக்கும் நேரத்தில் ஓய்வு இல்லாமல் தொடர்ந்து வேலை செய்து வருகிறார்கள்.
சீரியல் நடிப்பது மட்டும் இல்லாமல் நிறைய போட்டோ ஷுட்களில் கலந்துகொள்வது, தனியார் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக செல்வது, நிறைய ஆடை மற்றும் நகை கடைகளை விளம்பரப்படுத்துவது என இருவருமே தொடர்ந்து அதற்கான விஷயங்களை செய்கிறார்கள்.
விரைவில் அவர்கள் சென்னையில் கட்டியுள்ள புதிய வீட்டின் கிரகப்பிரவேசத்தையும் மிக சிறப்பாக செய்ய அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளனர்.
இந்த நிலையில் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் ஒன்றாக இணைந்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்கள். அதில் அவர்கள் வரும் ஜுன் 15ம் தேதி இலங்கை செல்ல இருக்கிறார்களாம்.
தனியார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ள போட்டிகள் இடம்பெறும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ள இருக்கிறார்களாம்.