D
சமீபத்தில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் ப்ரேமலு. மலையாளத்தில் வெளிவந்த இப்படத்திற்கு தென்னிந்திய அளவில் நல்ல ரீச் கிடைத்தது.
இப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டவர் நடிகை மமிதா பைஜூ. மலையாளத்தில் கனவு கன்னியாக வளம் வந்த இவர் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த ரெபல் படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார்.
இதை தொடர்ந்து விஷ்ணு விஷால், பிரதீப் ரங்கநாதன் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து தற்போது நடித்து வருகிறார். சென்சேஷனல் கதாநாயகியாக வளம் வரும் மமிதா பைஜூ நேற்று சென்னை வந்துள்ளார்.
பிரபல Mall ஒன்றில் கடை திறப்பு விழாவில் கலந்துகொண்ட நடிகை மமிதா பைஜூவை பார்க்க அங்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டுள்ளனர். இதனால் அங்கு நெரிசல் ஏற்பட்டு நடிகை மமிதா பைஜூ அந்த கூட்டத்தில் சிக்கியுள்ளார்.
ரசிகர்களின் இந்த எல்லைமீறிய செயலால் மமிதா பைஜூ சற்று பயந்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.