D
கன்னட சினிமா மூலம் நடிகையாக அறிமுகமாகி இன்று இந்தியளவில் தனக்கென்று தனி இடத்தை ரசிகர்கள் மத்தியில் பிடித்துள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா.
தமிழில் கார்த்தி ஹீரோவாக நடித்த சுல்தான் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதை தொடர்ந்து தளபதி விஜய்யுடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேஷனல் க்ரஷ் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் அடுத்ததாக பெரிதும் எதிர்பார்க்கப்படும் புஷ்பா 2 வெளிவரவுள்ளது. சமீபத்தில் இப்படத்திலிருந்து வெளிவந்த பாடல் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளது.
இந்த நிலையில், முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கு பெங்களூருவில் சொந்தமான பங்களா வீடு இருக்கிறது.
இதனுடைய மதிப்பு ரூ. 8 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் மும்பையில் நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கு சொந்தமாக Flat ஒன்று இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.