D
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கலகலப்பு 3 திரைப்படத்தை சுந்தர் சி எடுக்கப்போகிறார் என தகவல் வெளிவந்தது. ஆனால், தற்போது மீண்டும் ஒரு திகில் கதையை வைத்து தான் படம் எடுக்கிறார் என கூறப்படுகிறது.
இதில் எது உண்மை என்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவந்தால் மட்டுமே தெரியும். இந்த சூழலில் சுந்தர் சி-யுடன் வைகைப்புயல் உடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆம், பல ஆண்டுகள் கழித்து மீண்டும் வடிவேலுவை வைத்து படம் எடுக்க முடிவு செய்துள்ளாராம். ஏற்கனவே இந்த கூட்டணியில் வெளிவந்த வின்னர், தலைநகரம், நகரம் மறுபக்கம் ஆகிய படங்கள் நகைச்சுவையில் பட்டையை கிளப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.