D
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்து வருகிறார். ஒரு படத்திற்கு 150 கோடி.. 200 கோடி.. என சம்பளம் வாங்கும் அளவுக்கு அவரது மார்க்கெட் உயர்ந்து இருக்கிறது.
இந்த நேரத்தில் விஜய் அரசியல் கட்சியை தொடங்கி அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதால் அதற்கு முன் ஒப்பந்தமான படங்களை முடித்து சினிமாவில் இருந்து முழுமையாக விலக போவதாகவும் அறிவித்து இருக்கிறார்.
இந்நிலையில் நடிகை கஸ்தூரி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விஜய் பற்றி பேசி இருக்கிறார். “விஜய் ஒருவர் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் எந்த பாதிப்பும் இருக்காது” என கூறி இருக்கிறார்.
“விஜய் 30 வருடங்களாக தான் சினிமாவில் இருக்கிறார், ஆனால் சினிமா 150 வருடங்களாக இருக்கிறது. ஒருவருக்காக அது நிற்காது” எனவும் அவர் கூறியுள்ளார்.