D
பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது ராதிகா கீழே விழுந்ததால் அவரது கர்ப்பம் கலைந்துவிடுகிறது. அதன் பிறகு தான் சீரியல் கதை சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது.
ஏற்கனவே கர்ப்பத்தை கலைக்க சொல்லி வந்த கோபியின் அம்மா ஈஸ்வரி மீது தான் பழி வந்து விழுகிறது.
இந்நிலையில் கோபியாக நடிக்கும் சதிஷ் வெளியிட்டு இருக்கும் வீடியோவில் இனி சீரியலில் அதிர்ச்சி கொடுக்கும் பல விஷயங்கள் நடக்க இருக்கிறது என கூறி இருக்கிறார்.
“கதையில் நிறைய ட்விஸ்ட், த்ரில்லிங் ஆக போக போகிறது. மனதிற்கு நெருடலான சில விஷயங்களும் நடக்க இருக்கிறது. அது என்ன என்பதை சொல்ல முடியாது. ஆனால் அதை நீங்கள் என்ஜாய் பண்ணுவீங்க.”
“இன்னும் சிறந்த வில்லனாக நடிக்க ட்ரை பண்ணுறேன்” என நடிகர் சதிஷ் கூறி இருக்கிறார்.