D
மில்க் பியூட்டி என்று ரசிகர்களால் அழைக்கப்படுவர் தான் தமன்னா. தென்னிந்திய படங்களில் நடிக்கும் போது கொஞ்சம் கிளாமர் காட்டி வந்த தமன்னா, பாலிவுட் சென்றதும் முழு கவர்ச்சி நடிகையாக மாறிவிட்டார்.
அவர் நடிப்பில் வெளிவந்த நடிப்பில் வெளிவந்த ஜீ கர்தா மற்றும் லஸ்ட் ஸ்டோரீஸ் போன்ற வெப் தொடர்களில் படு கவர்ச்சியாக நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
சமீபத்தில் தமன்னா அரண்மனை 4 படத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்தாலும் வசூல் ரீதியாக வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை தமன்னா, ” ஒரு காலத்தில் தியேட்டர்களில் மட்டும் படம் பார்த்தார்கள், ஆனால் இப்போது OTT தளத்தில் படம் பார்க்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் ரில்ஸ் பார்க்கும் ரசிகர்களை ஈர்ப்பது சவாலாக இருக்கிறது. சொல்லப்போனால் ரில்ஸ் எங்களுக்கு போட்டியாக இருக்கிறது” என்று தமன்னா தெரிவித்துள்ளார்.