D
Youtube மூலம் பிரபலமான நட்சத்திரங்களின் Net Worth விவரங்கள் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது ஜி.பி. முத்துவின் Net Worth குறித்து தான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம்.
டிக் டாக் மூலம் தான் ஜி.பி. முத்துவிற்கு ரசிகர்கள் மத்தியில் அறிமுகம் ஏற்படுகிறது. இதன்பின் Youtube பக்கம் வந்தார். இதில் தனக்கு ரசிகர்கள் அனுப்பும் லெட்டர்களை படித்து youtube தளத்தில் பிரபலமானார். இதற்காக அவருக்கு விருது கூட கிடைத்தது.
பின் விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். ஆனால், நிகழ்ச்சியின் இடையிலேயே அதிலிருந்து விலகி விட்டார். இதன்பின் குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுத்தார்.
மேலும் தற்போது சன் டிவியில் டாப் குக்கு டூப் குக் நிகழ்ச்சியில் பட்டையை கிளப்பி வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் பட்டம்மாள். இந்த தம்பதிக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். தனது குடும்பம் குறித்து தனது Youtube வீடியோக்களில் கூட ஜி.பி. முத்து பேசியுள்ளார்.
இந்த நிலையில், ஜி.பி. முத்துவின் Net Worth குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய Net Worth சுமார் ரூ. 50 லட்சம் முதல் ரூ. 1 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது. Youtube மூலம் இவருடைய மாத வருமானம் ரூ. 2 லட்சம் வரை இருக்கும் என்கின்றனர்.