D
நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் 20 வருடங்களை கடந்து முன்னணி ஹீரோயினாக இருந்து வருகிறார். அவர் விஜய்க்கு ஜோடியாக லியோ படத்தில் நடித்த நிலையில் அடுத்து அஜித் உடன் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.
சில வாரங்களுக்கு முன் திரிஷா விஜய் உடன் இருக்கும் மிரர் செல்பி போட்டோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதை தொடர்ந்து பல்வேறு கிசுகிசுக்களை பரவ தொடங்கியது.
இந்நிலையில் தற்போது மீண்டும் மிரர் செல்பி போட்டோவை வெளியிட்டு இருக்கிறார் திரிஷா.
Ukiyo என அந்த பதிவில் த்ரிஷா குறிப்பிட்டு இருப்பதால் அதன் அர்த்தம் என்ன என ரசிகர்கள் தேடி வருகிறார்கள்.
அந்த வார்த்தைக்கு ஜப்பானிய மொழியில் floating world என அர்த்தம். எதையும் கண்டுகொள்ளாமல் தனியாக இருப்பதை தான் அது குறிக்கிறதாம்.