D
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இதில் விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், குட் பேட் அக்லி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மட்டுமே இதுவரை முடிந்துள்ளது.
அஜித்தின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவர் சிறுத்தை சிவா. இவர்கள் இருவரும் இணைந்து வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் என நான்கு திரைப்படங்களை கொடுத்துள்ளனர்.
இதில் இவர்கள் கூட்டணியில் வெளிவந்த கடைசி படம் தான் விஸ்வாசம். 2019ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் உலகளவில் ரூ. 187 கோடி வரை வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது.
இந்த நிலையில், கன்னட திரையுலகின் சூப்பர்ஸ்டார் நடிகர் சிவராஜ் குமார் பேட்டி ஒன்றில் விஸ்வாசம் படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்து நடிக்க ஆசை என கூறியுள்ளார். இது பழைய தகவலாக இருந்தாலும், தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.