Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

நடிகர் பிரஷாந்தின் அந்தகன் படத்திற்காக உதவி செய்யும் தளபதி விஜய்.. என்ன தெரியுமா

0 1

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் தளபதி விஜய் தற்போது GOAT படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவருடன் இணைந்து முதல் முறையாக பிரபல நடிகர் பிரஷாந்த் நடித்திருக்கிறார்.

இதுவரை எந்த திரைப்படங்களும் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவில்லை என்பதால், திரையில் இவர்களுடைய கூட்டணியை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள். பிரஷாந்த் ஹீரோவாக நடித்து வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளிவரவிருக்கும் அந்தகன்.

இது இந்தியில் வெளிவந்த அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இப்படத்தை பிரஷாந்தின் தந்தையும், நடிகரும், இயக்குனருமான தியாகராஜன் இயக்கியுள்ளார்.

பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளிவரவுள்ளது. அந்தகன் படத்தின் முதல் பாடலை தளபதி விஜய் தான் ரிலீஸ் செய்யபோகிறாராம். இதன் மூலம் அந்தகன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.