D
இந்தியளவில் பிரபலமான நடிகையாக வலம் வரும் சமந்தா, தி பேமிலி மேன் வெப் தொடரின் மூலம் பாலிவுட் சினிமா பக்கம் திரும்பினார். இந்த வெப் தொடர் சர்ச்சையில் சிக்கினாலும் பாலிவுட்டில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதை தொடர்ந்து தற்போது சிட்டாடல் எனும் வெப் தொடரில் நடித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த நிலையில், சமந்தா கமிட்டாகியுள்ள புதிய வெப் தொடர் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, தி பேமிலி மேன் வெப் தொடரை இயக்கிய இயக்குனர்கள் ராஜ் மற்றும் டிகே தான் இந்த வெப் தொடரை தயாரிக்கிறார்கள். இதில் சமந்தா பாலிவுட்டில் பிரபலமான நடிகராக இருக்கும் ஆதித்யா ராய் கபூர் என்பவருடன் இணைந்து நடிக்கவுள்ளார்.
வெப் தொடர்களில் கலக்கிக்கொண்டிருக்கும் நடிகைகளில் ஒருவரான வாமிகா கேபியும் இந்த வெப் தொடரில் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. மேலும் இந்த வெப் தொடரை ரகி அணில் பார்வே என்பவர் தான் இயக்கவுள்ளார்.
இவர் இயக்கத்தில் இதற்கு முன் தும்பாட் எனும் திரைப்படம் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.