D
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் GOAT படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. விஜய் டபுள் ரோலில் நடிக்கும் இந்த படத்தின் கதை டைம் ட்ராவல் பற்றியது என கூறப்படும் நிலையில் மறைந்த பல முக்கிய பிரபலங்கள் ஏஐ மூலமாக உருவாக்கம் செய்யப்பட்டு படத்தில் காட்டப்பட இருக்கின்றனர்.
விஜயகாந்த் தொடங்கி பல நடிகர்கள் படத்தில் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே GOAT படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருக்கின்றன. இந்நிலையில் தற்போது மூன்றாவது பாடல் பற்றி தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த பாடலை ஸ்ருதி ஹாசன் தான் பாடி இருக்கிறாராம். விரைவில் இது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது