D
பிரஷாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அந்தகன் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 15 ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தை இயக்குநரும் நடிகர் பிரசாந்த்தின் தந்தையுமான தியாகராஜன் தயாரித்து இயக்கியுள்ளார்.
மேலும் இப்படத்தில் பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி, மனோபாலா, வனிதா எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளார்.
தற்போது இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் கலந்துகொண்டு பேசிய வனிதா, என்னைப்போன்ற 80களில் பிறந்தவர்களுக்கு நடிகர் பிரசாந்த் கிரஷ். எங்களுக்கு பிடித்த ஹீரோ இவர் தான். கடந்த சில ஆண்டுகளில் எனக்கும் பிரஷாந்த் இடையே உருவான நட்பு மிகவும் மதிப்பு வாய்ந்தது.
பிரசாந்த் அவருடைய அப்பாவிடம் இருந்து கடின உழைப்பு, நேர்மை உள்ளிட்ட பல குணங்களைக் கற்றுள்ளார். எனக்கும் இப்படியொரு அப்பா இருந்தா போதும் என்று வனிதா எமோஷனலாக பேசியுள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.