D
குணச்சித்திர வேடங்களில் நடித்து அதில் தனெக்கென ஒரு இடத்தை திரையுலகில் பதித்தவர் நடிகர் நெப்போலியன். நடிகராக மட்டுமல்லாமல் அரசியல் பிரமுகராகவும் தமிழகத்தில் ஜொலித்தவர். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் அவருடைய மூத்த மகன் தனுஷுக்கு உடல் நிலை சேரி இல்லாமல் இருந்ததால். அவர் சினிமா மற்றும் அரசியல் என எல்லாவற்றையும் விட்டு விலகி குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகி இருந்தார்.
தற்போது நெப்போலியன், அவருடைய மகன் தனுஷுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார் . கடந்த சில வாரங்கள் முன்பு திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்த அக்ஷயா என்ற பெண்ணோடு வீடியோ கால் மூலம் எங்கேஜ்மென்ட் நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தனுஷ் மற்றும் அக்ஷயாவின் திருமண பத்திரிகை வீடியோ வைரல் ஆகி வருகிறது. அது பழங்கால முறைப்படி ஓலைச்சுவடி வடிவில் அச்சரிக்கப்பட்டு இருக்கிறது. அதே நேரத்தில் நெப்போலியன் மகனின் திருமணம் நவம்பர் 7 ஆம் தேதி ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் நடைபெற இருக்கிறது என கூறப்படுகிறது.