D
வாய்ப்பு வந்தும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்காதது ஏன்?- முதன்முறையாக கூறிய சீரியல் நடிகை சுஜிதா
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி பல வருடங்களாக நடித்துவரும் பிரபலங்கள் பலர் உள்ளார்கள்.
அவர்களின் லிஸ்டில் பிரபல நடிகை சுஜிதாவும் இடம்பெறுவார். சீரியல், படங்கள் என மாறி மாறி நடித்துவரும் சுஜிதா இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் பங்குபெற்று வருகிறார்.
தொடர்ச்சியாக 3 வாரங்களுக்கு இவர்தான் Chef Of The Week பட்டத்தை வென்றிருக்கிறார்.
சிறுவயதில் இருந்தே நடித்து வந்தாலும் சுஜிதா பெரிய அளவில் ரீச் ஆன விஜய் தொலைக்காட்சியில் 5 வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் தான்.
தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய இவர் ஏன் 2ம் பாகத்தில் நடிக்கவில்லை என்பது குறித்து ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர், 2ம் பாகத்தில் நான் அம்மாவாக நடிக்க வேண்டிய நிலை இருந்தது, அதிலும் மூத்த மகளுக்கு திருமணம் முடிந்து குழந்தை இருக்கிறது என்று கதை.
இதில் நான் நடித்தால் நன்றாக இருக்காது என நினைத்தேன், சேனல் தரப்பில் இருந்தும் என்னிடம் உங்களுக்காக கதையை வேண்டும் என்றால் மாற்றிக் கொள்கிறோம் என்று சொன்னார்கள்.
ஏற்கெனவே 5 வருடமாக ஒரே கதையில் நடித்துவிட்டோம், அதனால் இனி ஒரு மாற்றம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நான் நினைத்தேன். அதனால் தான் சேனல் தரப்பில் பல சலுகைகள் கொடுத்தும் நான் நடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.