D
இணையம் மூலம் தொடருந்து இருக்கைகளை முன்பதிவு செய்யும் முறையை செப்டம்பர் 1ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்க தொடருந்துத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, தொடருந்து இருக்கை முன்பதிவு முறை செப்டம்பர் 1ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தற்போதுள்ள முறைக்கமைய, இருக்கை முன்பதிவு இரவு 7 மணிக்கே ஆரம்பமாகிறது.
எனினும், புதிய முறைப்படி, முன்பதிவு நேரம், முற்பகல் 10 மணிக்கு ஆரம்பிக்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.