Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

விஜய்க்கு பயங்கரமாக பிடித்த ஹீரோ இவர் தான்.. ரஜினி இல்லை! வேறு யார் தெரியுமா?

0 4

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக விஜய் தற்போது GOAT படத்தில் நடித்துள்ளார். அடுத்த மாதம் 5ஆம் தேதி வெளிவரவிருக்கும் இப்படத்தின் மீது அளவுகடந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளனர்.

GOAT படத்தை முடித்தபின் விஜய் தளபதி 69ல் நடிக்கவுள்ளார். இப்படம் தான் தனது கடைசி படமாக இருக்கும் என்றும் அவர் அறிவித்துவிட்டார். இதன்பின் முழுமையான அரசியலில் இறங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய் சூப்பர்ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகர் என்பதை நாம் அறிவோம். அவருடைய அண்ணாமலை படத்தின் வசனத்தை கூறி தான் தனது தந்தையிடம் படத்தில் நடிக்கும் வாய்ப்பை விஜய் கேட்டார். இதன்பின் தான் ஹீரோவாகவும் நடிக்க துவங்கினார்.

இந்த நிலையில், விஜய்க்கு பிடித்த மற்றொரு ஹீரோ குறித்து நடிகர் தாமு பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார். இதில் நடிகர் விஜய்க்கு, நடிகர் அஜித்தை மிகவும் பயங்கரமாக பிடிக்கும் என அவர் கூறியுள்ளார். சில காலம் பில்லா படத்தின் தீம் ம்யூசிக்கை தனது போன் டயல் டோனாக வைத்திருந்தாராம் விஜய்.

Leave A Reply

Your email address will not be published.