D
ஹிந்தி மற்றும் தெலுங்கு படத்தில் நடித்து வந்த காஜல் அகர்வால், பரத் நடிப்பில் வெளிவந்த பழனி என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இப்படத்தை தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா எனப் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். குறிப்பாக இவர் விஜய்யுடன் சேர்ந்து நடித்த எல்லா படமும் ஹிட். திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்த காஜல் அகர்வால், மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய காஜல் அகர்வால், நான் ஒரு படத்தில் நடித்துக்கொண்டு இருக்கும் போது அந்த படத்தில் பணியாற்றிய உதவி இயக்குனர் ஒருவர், என்னுடைய அனுமதி இல்லாமல் கேரவனுக்குள் உள்ளை நுழைந்தார். பின் அந்த நபர் தான் அணிந்து இருந்தா சட்டையை கழட்டி இதயத்தின் மீது இருக்கும் எனது பெயரோடு கூடிய டாட்டுவை காட்டினார்.
அந்த நபர் அப்படி செய்ததை பார்த்து பயந்துவிட்டேன். அவர் என் மீது வைத்து இருந்த அன்பு மிகுதியால் அப்படி செய்து இருக்கலாம் ஆனால் அவர் வெளிப்படுத்திய விதம் சரியில்லை. ஷூட்டிங் முடியும் வரை எனக்கு பயமாக இருந்தது என்று காஜல் கூறியுள்ளார்.