D
தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமாக சூப்பர் சிங்கர், சரிகமப போன்ற பாடல் நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சி இப்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
அண்மையில் தொடங்கப்பட்ட 4வது சீசன் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த 4வது சீசன் 24 போட்டியாளர்களுடன் கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
கடந்த 2 வாரங்களாக Intro ரவுண்ட் நடைபெற இநத வாரத்தில் இருந்து முதல் காம்பெடிஷன் ரவுண்ட் தொடங்கியுள்ளது.
இந்த வாரம் ப்ரீ ஸ்டைல் ரவுண்ட், இரண்டு போட்டியாளர்கள் இணைந்து ஒரு பாடலை பாட வேண்டுமாம்.
இதில் சிறப்பாக பாடுபவர்களுக்கு வழக்கம் போல் கோல்டன் பெர்பாமன்ஸ் ஷவர் கிடைக்க இருக்கிறதாம்.
இதில் சரத் சார்ஸ் மற்றும் ஸ்வேதா ஆகியோர் பூக்களே சற்று ஓய்வெடுங்கள் என்ற பாடலை பாடி நடுவர்களை அசத்தியுள்ளனர்.
சரத் பாடியதை கேட்டு அசந்துபோன கார்த்தி வாவ் வாட் எ சிங்கிங் மேன் என பாராட்ட ஸ்ரீநிவாஸ் நீ எதுக்கு டா இங்க வந்து பாடுற? நேரா ஸ்டூடியோவுக்கு போய் பாட வேண்டியது தானே என்று சொல்லி சரத்தை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளார்.