D
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் ஸ்ருதி ஹாசன். கடைசியாக இவர் நடிப்பில் சலார் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஸ்ருதி ஹாசன் சாந்தனு என்பவருடன் லிவிங் டுகெதரில் இருந்தார். ஆனால் சில காரணத்தால் பிரேக் செய்துவிட்டதாக இணையத்தில் தகவல் வெளியானது.
சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ஸ்ருதி ஹாசன், அடிக்கடி ரசிகர்களுடன் கலந்துரையாடுவார்.
இந்த நிலையில் தற்போது ரசிகர் ஒருவர், நீங்கள் Single-ஆ, Committed-ஆ என்று கேள்வி கேட்டார். இதற்கு ஸ்ருதி ஹாசன், “நான் இப்போது சிங்களாக இருக்கிறேன். வேறு ஒருவருடன் மிங்கிளாக தயாராக இருக்கிறேன்” என்று பதில் அளித்து இருக்கிறார்.