D
ராயன் படத்திற்கு முதல் நாளில் இருந்தே மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. தனுஷின் 50வது படமான ராயனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருந்தார்.
இப்படத்தை இயக்கி, நடித்திருந்தார் தனுஷ். மேலும் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், செல்வராகவன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மேலும் எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடித்திருந்தார்.
உலகளவில் வசூலில் மாஸ் காட்டி வந்த ராயன் படம் 7 நாட்களில் ரூ. 102 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்தது. இதன்மூலம் வேகமாக 100 கோடி வசூல் செய்த தனுஷின் திரைப்படம் என்ற சாதனையையும் ராயன் படைத்துள்ளது.
இந்த நிலையில், இதுவரை ராயம் திரைப்படம் உலகளவில் ரூ. 130 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இனி வரும் நாட்களில் ராயன் படத்தின் வசூல் எந்த அளவிற்கு பாக்ஸ் ஆபிஸில் உச்சத்தை தொடப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.