D
தளபதி விஜய் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் GOAT. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இப்படத்திலிருந்து இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால், சில இதுகுறித்து விமர்சனங்களையும் தொடர்ந்து வைத்து வருகிறார்கள். மேலும் டீ ஏஜிங் குறித்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இந்த நிலையில், வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி வெளிவரவுள்ள GOAT திரைப்படத்தின் UK புக்கிங் தற்போது துவங்கியுள்ளது. இதில் முதல் நாளே 3,000 டிக்கெட்கள் புக் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு முன் வெளிவந்த லியோ படம் புக்கிங் ஓப்பன் செய்யப்பட்ட முதல் நாள் 10,000 டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் லியோ படத்தைவிட GOAT படத்திற்கு புக்கிங் குறைவாக வந்துள்ளது. ஆனால், இதுவே மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. UK-வில் புக்கிங் துவங்கிய முதல் நாளே 3,000 டிக்கெட் விற்பனை என்பது தமிழ் திரைப்படத்திற்கு சாதாரணமான விஷயம் இல்லை என்கின்றனர்.
ரஜினியின் ஜெயிலர் படத்திற்கு கூட முதல் நாள் டிக்கெட் புக்கிங் ஓபன் ஆன நிலையில், 2,000 டிக்கெட்கள் மட்டுமே விற்பனை ஆனதாம். ஆனால், விஜய்யின் GOAT படத்திற்கு 3,000 டிக்கெட்கள் விற்பனை செய்து மாஸ் காட்டியுள்ளார் தளபதி என கூறப்படுகிறது.