D
தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் நாக சைதன்யா. இவர் கடந்த 2017-ம் ஆண்டு சமந்தாவை திருமணம் செய்துகொண்டார். ஆனால் சில தனிப்பட்ட காரணத்தால் விவாகரத்து செய்து பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாகவே நடிகை சோபிதா துலிபாலாவுடன் நாக சைதன்யா டேட்டிங் சென்று வந்தார் என ஏகப்பட்ட போட்டோ இணையத்தில் வைரலாகி வந்தது.
இந்நிலையில் நாக சைதன்யா சோபிதா துலிபாலா இடையே நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. நிச்சியதார்த்த புகைப்படங்களை நாகர்ஜுனா தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.