Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர்

0 1

இந்திய (India) கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் ஷிகர் தவான் (Shikhar Dhawan) சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

குறித்த அறிவிப்பை இன்று (24) எக்ஸ் தளத்தில் காணொளியொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி தொடக்க வீரரான ஷிகர் தவான், 2010ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு (Australia) எதிரான தொடரின் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு அறிமுகமானார்.

தனது சிறப்பான அதிரடி ஆட்டத்தின் மூலம் ரி20 மற்றும் டெஸ்ட் அணிகளிலும் இடம்பிடித்தார்.

ஷிகர் தவான் இந்தியாவிற்காக இதுவரை 34 டெஸ்ட் போட்டிகள், 167 ஒருநாள் போட்டிகள் மற்றும் 68 ரி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

50 ஓவர் போட்டிகளில் 6,793 ஓட்டங்கள் குவித்துள்ளதுடன் சராசரி 44.11 ஆகும்.டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 2315 ஓட்டங்கள் அடித்துள்ளார். சராசரி 40.61 ஆகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 சதங்களும், ஒருநாள் போட்டியில் 17 சதங்களும் அடித்துள்ளார்.

ஷிகர் தவான் கடைசியாக 2018ம் ஆண்டு இந்தியாவிற்காக டெஸ்டில் விளையாடியதுடன் 2022ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் கடைசியாக இந்தியாவிற்காக விளையாடினார்.

2021ம் ஆண்டு கடைசியாக சர்வதேச ரி20 போட்டிகளில் விளையாடினார்.

ஐ.பி.எல் தொடர்களில் டெல்லி , மும்பை, டெக்கான் சார்ஜர்ஸ், ஐதராபாத் அணிகளுக்காக விளையாடியுள்ள தவான், கடந்த சீசனில் பஞ்சாப் அணிக்காக விளையாடியுள்ளார்.

அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிகவேகமாக சதம் அடித்தவர் என்ற சாதனையை தவான் படைத்துள்ள தவான், ஐ.சி.சி. செம்பியன்ஸ் (2013,2017) தொடர்களில் அதிக ஓட்டங்களை குவித்து கோல்டன் பேட் விருதை வென்ற வீரராவார்.

மேலும், 2021ல் விளையாட்டில் சிறந்து விளங்கியதற்காக, உயரிய விருதான அர்ஜுனா விருது இந்திய மத்திய அரசால் தவானுக்கு வழங்கப்பட்டது.

தனது ஓய்வு தொடர்பாக காணொளியில், இன்று நான் திரும்பிப் பார்க்கும்போது, ​​​​எனக்கு நல்ல நினைவுகள் மட்டுமே உள்ளன என்றும் எனக்கு ஒரே ஒரு கனவு இருந்தது, அது இந்தியாவுக்காக விளையாட வேண்டும், நான் அதை அடைந்தேன்.

நான் நீண்ட காலமாக கிரிக்கெட் விளையாடிய எனது அணிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்றும் எனக்கு இன்னொரு குடும்பம் கிடைத்தது, எனக்கு பெயர், புகழ் மற்றும் ரசிகர்கள் அனைவரின் அன்பும் கிடைத்தது என்றும் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.